தேசப்புதலவர் குடும்பம்
தேசப்புதல்வர்களின் உறவுகள் எம்மிடம் தமது தகவல்களை வளங்கி பதிவு செய்து கொள்வதற்கான படிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
தேசப்புதல்வர்கள் குடும்ப விபரங்கள் எம்மிடம் முழுமையாக அற்ற நிலையிலும் நாம் எமது தேசப்புதல்வர்கள் குடும்ப மதிப்பளிப்பு நிகள்வுகளை பிராந்திய ரீதியாக முன்னெடுத்து வருகின்றோம், அவ்வாறு நடைபெறும் நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் மற்றும் விபரங்கள் கீழே இணைக்கப்படும்.
“ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக கல்லறை வணக்க நிகழ்வு!“ஈகப்பேரொளி” முருகதாசனின் மூன்றாம் ஆண்டு நினைவுனாளான இன்று லண்டனில் அவரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள இடத்தில் “கல்லறை வணக்க நிகழ்வு” நடைபெற்றது. இன்று 12.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு “ஈகப்பேரொளி” முருகதாசனின் வித்துடல் அமைந்துள்ள வளாகத்தின் வாயிலில் கூடிய மக்கள் மலர்களையும், மெழுகுவர்த்தியையும் கைகளில் ஏந்தி வரிசையாக 200 மீற்றர் தூரம் நடந்து “ஈகப்பேரொளி” முருகதாசனின் விதைகுழி அருகில் ஒன்றுகூடினர். முதலில் “ஈகப்பேரொளி” முருகதாசனின் தந்தையார் திரு.வர்ணகுலசிங்கம் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி வைக்க மலர் மாலையினை தாயார் [...]
லண்டனில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், சமகால அரசியல் ஆய்வரங்கும்.“தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், சமகால அரசியல் ஆய்வரங்கமும் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு வடமேற்கு லண்டன் WATFORD ROAD, NORTHWICK PARK, HARROW, MIDDLESEX, HA1 3TP எனும் முகவரியில் அமைந்துள்ள “WESTMINISTER UNIVERCITY ” கலையரங்கில் நேற்று (18.12.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8:30 மணீவரை நடைபெற்றது. [...]
தேசிய நினைவெழுச்சி நாள் 2011 – பேரெழுச்சியுடன்பேரெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு. – பிரித்தானியா பிரித்தானியாவில் 27.11.2011 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளில் பேரெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர். முருகதாசன் நினைவுத் திடலில் மதியம் 12:30 மணிக்கு ஈகைச்சுடரேற்றலோடு ஆரம்பமான இத் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வில் ஈகைப்பேரொளி முருகதாசின் தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தாயக விடுதலைக்காக தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள், மற்றும் [...]















