Press Releases

தேசிய நினைவெழுச்சி நாள் 2011 – பேரெழுச்சியுடன்

பேரெழுச்சியுடன்  பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு. – பிரித்தானியா
Tamil National Remembrance Day 2011
பிரித்தானியாவில் 27.11.2011 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளில் பேரெழுச்சியுடன்  பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.
முருகதாசன் நினைவுத் திடலில் மதியம் 12:30 மணிக்கு ஈகைச்சுடரேற்றலோடு ஆரம்பமான  இத் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வில்  ஈகைப்பேரொளி முருகதாசின் தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தாயக விடுதலைக்காக தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள், மற்றும் அன்நிய சிறீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும், மண்மீதும், மொழிமீதும் பற்றுக்கொண்டு அதற்காகப் பணிசெய்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மாமனிதர்களுக்காகவும், தமிழ்ர்களின் விடுதலைக்காக ஆசிய ஐரோப்பிய நாடுகளில் வேழ்வித் தீ ஆகிய தியாகிகளுக்காகவும், சிறீலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தாய்த் தமிழக உறவுகளுக்க்ஆகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தினை தொடர்ந்து 12:35 மணிக்கு (தாயக நேரம் பிற்பகல் 6:05மணி) பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவரும், தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவியுமான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்த்அரம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து துயிலுமில்ல பாடல் அகன்ற திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்வணக்க்அ நிகழ்வுகளும் எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றது.
தாயகத்தில் மாவீரர்களை விதைத்த துயிலுமில்லங்களைப் போன்று அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவுக் கல்லறைகளில் மக்கள் வரிசையாக வந்து மலர்வணக்கம் செலுத்தினர்.
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான கார்த்திகை மலர்களையும், தீபம் ஏற்றுவதற்கான சிட்டிகளும்  ஏற்பாட்டாளர்கள் விற்பனை செய்யாது மக்களுக்கு வழங்கியதும், அம் மலர்களை மக்கள் கல்லறைகளில் வைத்து வணங்கிய பின் கார்த்திகை மலர்க் குவியலின் நடுவே கல்லறைகள் மிடுக்குடன் காட்சியளித்தமை அனைவரதும் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மைக்கோனால்ட், விரேந்திர சர்மா, யூலியன் பெல், றோபேட் இவான்ஸ், மற்றும் DR. ஒண்கார் சஹோத்தா, ACT NOW தொண்டு நிறுவனத்தின்  இயக்குனர் திரு. ரிம் மார்ட்டின் உட்பட பிரித்தானியத் தமிழ்ர் பேரவையின் Chairman திரு. நல்லைநாதன் சுகந்தகுமார், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அதன் மாவீரர் குடும்பனலன் பேணல் அமைச்சர் திரு. உருத்திராபதி சேகர்,  பிரித்தானிய தமிழ் இளையோர்அமைப்பின் Continue reading “தேசிய நினைவெழுச்சி நாள் 2011 – பேரெழுச்சியுடன்” »
Share With:
  • Print
  • Digg
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • LinkedIn
  • Live

பிரித்தானியாவில் ஒன்றுபட்ட நிகழ்வாக ஒரே இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்.

பிரித்தானியாவில் ஒன்றுபட்ட நிகழ்வாக மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒரே இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ExCeL மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்மாற்றப்பட்டு SKLPC  “India Gardens” West End Road, Northolt, Middlesex, UB5 6RE எனும் முகவரியில் அமைந்துள்ள முருகதாசன் நினைவுத் திடலில்  மாபெரும் கூடாரத்தில் ஒன்றுபட்ட நிகழ்வாக ஒரே இடத்தில் நடைபெறவுள்ளது.
காலநிலையை கருத்தில் கொண்டு மக்களின் வசதிகருதி ஒரே நேரத்தில் பத்தாயிரம் மக்கள் ஒன்றாக அமர்ந்து இருக்கக்கூடிய முறையில் மாபெரும் கூடாரம் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு அருகாமையில் உள்ள நிலக்கீழ் தொடரூந்துகளில் இருந்து மக்களை நிகழ்வு இடப்பெறும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வாகன ஒழுங்குகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
Share With:
  • Print
  • Digg
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • LinkedIn
  • Live

பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வு இடமாற்றம்.

எதிர்வரும் 27.11.2011 அன்று ExCeL மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்ந தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இடம் மாற்றப்பட்டுள்ளது.

தகுந்த ஒழுங்குபடுத்தலுடன் திட்டமிட்டு ஏற்பாடு செய்து அதிகளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் சிலரின் செயற்பாட்டினால் ExCeL மண்டபம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு வருத்தத்துடன் தெரியப்படுத்துகின்றோம்.

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் 25.08.2011 முதல் ExCeL மண்டபத்தை  முற்பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு பணிகளும் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் குறிப்பிட்ட சிலரால் ExCeL மண்டபத்திற்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தம்மீது செலுத்தப்பட்ட அதிக அழுத்தங்கள் காரணமாக பொருத்தமில்லாத காரணங்களை முன்வைத்து ExCeL நிர்வாகத்தினால் மண்டபம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
Continue reading “பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வு இடமாற்றம்.” »

Share With:
  • Print
  • Digg
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • LinkedIn
  • Live

2011 தேசிய நினைவெழுச்சி நாளிற்கான பொதுச் சந்திப்பு முடிவு

ஓரிடத்தில் அனைவரும் ஒன்றுகூடி தேசிய நினைவெழுச்சி நாள் எழுச்சியோடு நடைபெற வேண்டும். – பிரித்தானிய தமிழ் மக்கள் முடிவு.


எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பான  கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நேற்று (16௰௨011) ஞாயிற்றுக்கிழமை  நடாத்தப்பட்டது.

வடமேற்கு லண்டன் பகுதியின் 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB Venue மண்டபத்தில் மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை நடைபெற்ற இவ் முக்கிய கலந்துரையாடலில் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்து இருநூறிற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அகவணக்கத்தோடு ஆரம்பித்த இக் கலந்துரையாடலை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் அதன் தலைவி திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், Dr. வசந்தன், தமிழ் இளையோர் ஒருங்கிணைப்பாளர் திரு. கபில் ஆகியோர் தலைமை தாங்கி நடாத்தினர். முதலில் உரையாற்றிய திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் இந்த தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் Continue reading “2011 தேசிய நினைவெழுச்சி நாளிற்கான பொதுச் சந்திப்பு முடிவு” »

Share With:
  • Print
  • Digg
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • LinkedIn
  • Live

தேசிய நினைவெழுச்சி நாளிற்கான பொதுச் சந்திப்பு

அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியோடு நடாத்த முன்வருவோம்.

எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக  கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்படவுள்ளது.

16 / 10 / 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE மண்டபத்தில்  தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Continue reading “தேசிய நினைவெழுச்சி நாளிற்கான பொதுச் சந்திப்பு” »

Share With:
  • Print
  • Digg
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • LinkedIn
  • Live

இம்முறையும் ExCeLல் தேசிய நினைவெழுச்சி நாள் 2011

Full Size Advert leaflet for Tamil National Remembrance Day 2011

Full Size advert for web publishing.

எதிர்வரும் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்  வழமைபோல் எக்சல் மண்டபத்தில் (EXCEL) நடைபெறவுள்ளது.

கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட கசப்பான பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகளைத் திருத்தி வெளிப்படைத் தன்மையுடன் இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 ற்கான செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இச் செயற்குழுவின் ஊடாக ஆரம்பக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த கட்டத்தினை நோக்கி உறுதியாக நகர்கின்றோம்.

இச் சூழலில் சில குழப்பகரமான செய்திகள் சில விசமிகளாலும், சுயநலன் விரும்பிகளாலும் மின்னஞல்கள் ஊடாகவும், கைத்தொலைபேசி ஊடான குஞ்செய்திக ள் வாயிலாகவும் பரப்பப்பட்டும் வருகிறது. அத்தோடு இதற்கு பக்கபலமாக அண்மைக்காலமாக குழப்பகரமான பல செய்திகளை வெளியிட்டு தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் குழப்பங்களை விளைவிக்கும் செயலில் இறங்கியுள்ள சில ஊடகங்களிலும் இவ்வாறான விசமிகளின் செய்திகள் முகபுச்செய்தியாகவும் பிரசுரிக்கப்படுகிறது.

அத்தோடு எமது நிறுவனத்தின் பெயரான “தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்” எனும் பெயரில் போலியான விளம்பரங்களையும், செய்திகளையும் மக்களைக் குளப்பும் நோக்கோடு வெளியிட்டும் வருகின்றனர்.  மக்களாகிய நீங்கள் போலியாநதும், குளப்பகரமானதுமான இவ்வாறான செய்திகளை புறம்தள்ளி எவ்வித குளப்பங்களுமின்றி இவ்வருடமும் வழமைபோல் EXCEL மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

எமது தாயகத்திற்காக தம்மையே அர்ப்பணித்த மாவீரர்ச் செல்வங்களை நினைவுகூரும் இந்த நன்நாளில் அவர்களின் தியாகத்தை எம் நெஞ்சங்களில் சுமந்தவர்களாக அனைவரும் ஓரிடமாக ஒன்றுகூடி ஒரு கணம் அவர்களுக்காக தலைகளை குனிந்து அகவணக்கம் செலுத்தி, அவர்களின் கல்லறைகளிலும், திருவுருவப் படங்களிலும் மலர்களை தூவி வணங்குவதே அம் மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.

எமது மக்கள் சிந்திய இரத்தமும், எமது மாவீரர்கள் புரிந்த தியாகமும் வீண்போகாது இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

தற்போது செயற்பாட்டில் உள்ள தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் செயற்குழுவானது வெளிப்படையானது. இக்குழு யாரையும்  ஒதுக்கியோ, யாரையும் புறம்தள்ளியோ செயற்படவில்லை. சுயநலமற்று இதயசுத்தியோடு தமிழ்த் தேசிய விடுதலையை நேசிக்கும் அனைவரையும் இணைத்தே செயற்படுகிறது.

இதுவரை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஏதாவது தவறுகள் நடைபெற்றிருந்தால் அதனை சுட்டிகாட்டும் கடமை தேசியத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ளது. இதே போன்று தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் மக்களாகிய நீங்கள் வழங்க முடியும்.

எம்மால் செயற்படுத்தப்படும் சகல பணிகளும் ஊடகங்கள் ஊடாக அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் என்பதையும், அவை எம்மால் அனுப்பப்பட்டவைதான் என்பதை உறுதிப்படுத்த எமது இணையத்தளத்தில்www.tnrf.co.uk சென்று அவற்றை உறுதி செய்து கொள்ளலாம் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். மாவீரர்களை நினைவுகொள்ளும்  நிகழ்வான தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை எமது இணையத்தளத்திலும் www.tnrf.co.uk சென்று பார்வையிடலாம்.

மேலும் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அறிய 02087338203 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது எனும் மின்னஞல் முகவரி ஊடாகவோ தொடர்புகொண்டு தெளிவுபெற்றுக்கொள்ளலாம்.

Small Banner for Websites

 

ஊடகத் தொடர்பு மையம்,
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் - ஐக்கிய இராட்சியம்
URL: www.TNRF.co.uk | TEL: 020 8733 8203
Official Twitter @tnrfuk | Facebook Group: TNRF

Share With:
  • Print
  • Digg
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • LinkedIn
  • Live

தேசிய நினைவெழுச்சி நாள் 2011

தாய் நாட்டின் விடிவிற்காகவும், எதிர்கால சந்ததியினர் நிம்மதியாகவும், சுய கெளரவத்தோடும் சுதந்திரமாய் வாழவேண்டும் என்பதற்காய் தம் இளைமைக்காலத்தை அர்ப்பணித்து மண்ணினுள் வித்தாகி மரணத்தை வென்ற மாவீரர்களுக்காக ஒருகணம் தலைசாய்த்து வணங்கிடும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் தொடர்பான விளம்பர துண்டுப்பிரசுரங்கள் எம்மால் பதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இத் துண்டுப் பிரசுரங்கள் தியாக தீபம் திலீபனின் 24 ஆவது நினைவு நாளான நாளை (26/09/2011) திங்கட்கிழமை முதல் அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் பெற்றுக்கொள்வதற்காக வைக்கப்படும் என்பதை அறியத் தருகிறோம்.

அத்தோடு இத் துண்டுப்பிரசுரம் பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரது வீடுகளுக்கும் இம்முறை தேசிய நினவெழுச்சி நாளை முன்னெடுக்கும் செயற்பாட்டுக்குழுவின் தொண்டர்களால் முடிந்தளவுக்கு கொண்டு தரப்படும்.

பல இன்னல்களின் மத்தியிலும், வேண்டாத தமிழ் விரோத ஊடகங்களின் தீய பரப்புரைகளின் மத்தியிலும் வழமைபோல் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியுடன் இவ்வருடமும் நடாத்துவதற்கான சகல வேலைகளையும்  தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் முன்னெடுத்துள்ளது.

எத்தனை இன்னல்கள் எம் எதிர் வரினும் அவை அததையும் வென்று எம் இலக்கை நாம் வெல்ல எமது தேசத்தின் காவல் தெய்வங்களாகிய மாவீரர்கள் எமக்கு என்றும் துணை நிற்பார்கள்.

நன்றி,
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Share With:
  • Print
  • Digg
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • LinkedIn
  • Live

தேசிய நினைவெழுச்சிநாள் 2011

முழுமையான ஊடக அறிக்கையை PDF வடிவத்தில் தரவிறக்கம் செய்வதற்கு:TNRF_PressRelease12_09_2011

 

பிரித்தானியாவில் நடைபெற்ற தேசிய நினைவெழுச்சிநாள் 2011 ற்கான நிகழ்வு ஏற்பாட்டுக்குழு சந்திப்பு.
2011 ஆம் ஆண்டின் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளை வழமைபோல் இம்முறையும் EXCEL மண்டபத்தில் பிரித்தானியாவில் நடாத்துவதற்கான ஒழுங்குகளை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் முன்னெடுத்துவருகிறது.
அதன் அடிப்படையில் ஏற்கனவே ஊடகங்களினூடாக அறிவித்ததின் படி நேற்று (11-09-2011) தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் அலுவலகம் ஒன்று லண்டனில் இயங்க ஆரம்பித்ததோடு  லண்டனில்  2011 ற்கான தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்விற்கான செயற்குழுவின் சந்திப்பும் நடைபெற்றது.
இதில் பல முக்கிய முடிவுகள் எட்டப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக நிதி கையாழுகை தொடர்பாக விவாதிக்கப்பட்டு அனைவரினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அதற்கமைய இந்த நிகழ்விற்கான (தேசிய நினைவெழுச்சிநாள் 2011 ற்கான) ஆரம்பகட்ட நிதிகளை பெறுவது எவ்வாறு, நிகழ்விற்காக மக்களின் பங்களிப்புக்களாக வழங்கப்படும் நிதிகளை எப்படி பெற்றுக்கொள்வது போன்ற முடிவுகள் எட்டப்பட்டு அதற்கான மாதிரி வடிவமைப்புக்களும் காண்பிக்கப்பட்டன.
Share With:
  • Print
  • Digg
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • LinkedIn
  • Live

இலண்டன் தேசிய நினைவெழுச்சி நாளில் 50,000க்கு மேற்பட்ட மக்கள்

இலண்டனிலுள்ள மிகப்பெரிய உள்ளரங்கமான எக்செல் கண்காட்சி மையமே இடம்பற்றாமல் நிரம்பி வழிய ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் தமது தேசிய நினைவெழுச்சி நாளை உணர்வுபூர்வமாக அனுட்டித்தனர். காலை 11மணிக்கு உள்ளரங்கக் கதவுகள் திறக்கப்படுமுன்பே 8,000ற்கும் மேற்பட்டோர் வெளியே காத்திருந்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் உரை பிரமாண்டமான திரைகளில் காண்பிக்கப்பட்டது. அவ்வுரையில் அவர் தற்சமயம் எம்மக்கள் சந்தித்துள்ள அழிவுகளையும், பின்னடைவுகளையும் மட்டும் நினைவுகூராது இது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தம் கூட்டாற்றலைக் கொண்டு தம்மினத்தின் இலட்சியப்பயணத்தை மேலும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் என்பதையும் நினைவூட்டினார். தேசிய நினைவெழுச்சி நாளுக்கான பொதுச்சுடரினை ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகம் முன் தன்னை ஆகுதியாக்கிய முருகதாசனின் தந்தையான வர்ணகுலசிங்கம் அவர்கள் ஏற்றி வைத்தார். மணியொலி மற்றும் அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச்சுடரை மாவீரன் சுதுவின் தாயார் திருமதி ரமணி சதானந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். இத்தருணத்தில் ஏறத்தாள 20,000 மக்கள் அரங்கத்துள் இருக்க உள்ளேவர இடமில்லாமல் திரள் திரளாக வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். Read the rest of this entry »
Remembrance Day 2010
MIT_1319 IMG_7693 IMG_7836 MIT_1221 IMG_7650 DSC_0039 MIT_1310 DSC_5502 IMG_7987 IMG_7842 MIT_1204 MIT_1316 IMG_7686 DSC_5223 IMG_7947 DSC_0042 IMG_7742 IMG_7798 IMG_7903 DSC_0113 IMG_7872 IMG_7638 IMG_7813 DSC_0188
27 NOV 2011 @ Murugadas Ninaivu Thidal
Follow TNRF Twitter
மாவீரர் கவிமழை

புதைத்த‌ இட‌த்தினிலே
புழுதி அட‌ங்க‌வில்லை
விதைத்த‌ வித்துட‌லில்
குருதி காய‌வில்லை அத‌ற்குள்
சிதைத்த‌ க‌ல்ல‌றையில்
சிலிர்த்து நிற்குமெங்க‌ள் ஆவி
ஈழ‌ம் மீட்டெடுத்து த‌மிழ்
இன‌த்தின் மான‌ம் காக்க‌வென‌
மார்த‌ட்டி வா த‌மிழா எம்
க‌ல்ல‌றையில் ச‌த்திய‌ம் தா தமிழா..

~~~~~~~~~~~~~~~~~~

மேலும்

உங்களுடைய கவிதைகளும் இங்கு இடம்பெறுவதற்கு எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்: tnrf.co.uk@gmail.com

Remember The Fallen