மாவீரர் கவிதைகள்
விடுதலை வரலாற்றில் தடம் பதித்த தியாக வேங்கைகளே!
பூணில் நஞ்சேற்றி
ஓவென்று இரையும்…
ஓவென்று இரையும் ஊதற்காற்றே வேகம் குறைத்து வீசு தேவகுமாரர்கள் இங்கே துயில்கின்றனர் தூக்கம் கலைத்துத் தொலைக்காதே
கல்லெறியும் பொல்லக் கனத்தமழையே மெல்லப் பூவெறிதல்போல பொழிக இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்
நிலமே மழைநீரை நிறையக்குடிக்காதே உள்ளே சில்லிட்டுப்போகும் மாவீரர் மேனிகள்
அதிர ஊண்டிநடப்பவரே எம் பிள்ளைகளின் கனந்த சயனம் கலையக்கூடும்
பூக்களையும் மெதுவாகப்போடுங்கள் காலப்பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள் கால்நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகிறார்கள்
ஆன்மா அழுகிறதே!
தாயக முகிலுக்குள் கருத்தரித்த
மழைத் துளிகளே!
கடலில் விழுந்து முத்தாகினீர்
கானகத்திடை வளமாகினீர்
தாய் மண்;ணில் உரமாகினீர்
சூரிய மகனின் வீச்சாகினீர்
ஈழவிருட்சத்தின் வேருக்கு
கனிமம் சேர்ந்த நீராகினீர் Continue reading “ஆன்மா அழுகிறதே!” »
வேழமூர்ந்த தமிழா
வேழமூர்ந்த தமிழா
ஈழத்தாய் இன்று
ஈனர்கள் கையில்
ஆழப்பிறந்த தமிழா
அடிமையாய் வாழ்தல் தகுமா? தாயகம்
மீழ மடிந்த வீரர் மேல்
சத்தியம் செய்து எழடா
கல்லறையில் சத்தியம் தா
புதைத்த இடத்தினிலே
புழுதி அடங்கவில்லை
விதைத்த வித்துடலில்
குருதி காயவில்லை அதற்குள்
சிதைத்த கல்லறையில்
சிலிர்த்து நிற்குமெங்கள் ஆவி
ஈழம் மீட்டெடுத்து தமிழ்
இனத்தின் மானம் காக்கவென
மார்தட்டி வா தமிழா எம்
கல்லறையில் சத்தியம் தா தமிழா..














