Archive for February 2012
“ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக கல்லறை வணக்க நிகழ்வு!
“ஈகப்பேரொளி” முருகதாசனின் மூன்றாம் ஆண்டு நினைவுனாளான இன்று லண்டனில் அவரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள இடத்தில் “கல்லறை வணக்க நிகழ்வு” நடைபெற்றது.
இன்று 12.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு “ஈகப்பேரொளி” முருகதாசனின் வித்துடல் அமைந்துள்ள வளாகத்தின் வாயிலில் கூடிய மக்கள் மலர்களையும், மெழுகுவர்த்தியையும் கைகளில் ஏந்தி வரிசையாக 200 மீற்றர் தூரம் நடந்து “ஈகப்பேரொளி” முருகதாசனின் விதைகுழி அருகில் ஒன்றுகூடினர்.
முதலில் “ஈகப்பேரொளி” முருகதாசனின் தந்தையார் திரு.வர்ணகுலசிங்கம் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி வைக்க மலர் மாலையினை தாயார் அணிவித்தார்.
தொடர்ந்து எல்லோருமாக இணைந்து ஒரே குரலில் உறுதியேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. உறுதியேற்பினைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வினை “ஈகப்பேரொளி” முருகதாசனின் உறவினர்கள் ஆரம்பித்துவைக்க தொடர்ந்து மக்கள் தமது மலர்வணக்கத்தினை செலுத்தினர்.
Continue reading ““ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக கல்லறை வணக்க நிகழ்வு!” »




