Archive for November 2011

தேசிய நினைவெழுச்சி நாள் 2011 – பேரெழுச்சியுடன்

பேரெழுச்சியுடன்  பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு. – பிரித்தானியா
Tamil National Remembrance Day 2011
பிரித்தானியாவில் 27.11.2011 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளில் பேரெழுச்சியுடன்  பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.
முருகதாசன் நினைவுத் திடலில் மதியம் 12:30 மணிக்கு ஈகைச்சுடரேற்றலோடு ஆரம்பமான  இத் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வில்  ஈகைப்பேரொளி முருகதாசின் தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தாயக விடுதலைக்காக தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள், மற்றும் அன்நிய சிறீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும், மண்மீதும், மொழிமீதும் பற்றுக்கொண்டு அதற்காகப் பணிசெய்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மாமனிதர்களுக்காகவும், தமிழ்ர்களின் விடுதலைக்காக ஆசிய ஐரோப்பிய நாடுகளில் வேழ்வித் தீ ஆகிய தியாகிகளுக்காகவும், சிறீலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தாய்த் தமிழக உறவுகளுக்க்ஆகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தினை தொடர்ந்து 12:35 மணிக்கு (தாயக நேரம் பிற்பகல் 6:05மணி) பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவரும், தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவியுமான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்த்அரம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து துயிலுமில்ல பாடல் அகன்ற திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்வணக்க்அ நிகழ்வுகளும் எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றது.
தாயகத்தில் மாவீரர்களை விதைத்த துயிலுமில்லங்களைப் போன்று அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவுக் கல்லறைகளில் மக்கள் வரிசையாக வந்து மலர்வணக்கம் செலுத்தினர்.
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான கார்த்திகை மலர்களையும், தீபம் ஏற்றுவதற்கான சிட்டிகளும்  ஏற்பாட்டாளர்கள் விற்பனை செய்யாது மக்களுக்கு வழங்கியதும், அம் மலர்களை மக்கள் கல்லறைகளில் வைத்து வணங்கிய பின் கார்த்திகை மலர்க் குவியலின் நடுவே கல்லறைகள் மிடுக்குடன் காட்சியளித்தமை அனைவரதும் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மைக்கோனால்ட், விரேந்திர சர்மா, யூலியன் பெல், றோபேட் இவான்ஸ், மற்றும் DR. ஒண்கார் சஹோத்தா, ACT NOW தொண்டு நிறுவனத்தின்  இயக்குனர் திரு. ரிம் மார்ட்டின் உட்பட பிரித்தானியத் தமிழ்ர் பேரவையின் Chairman திரு. நல்லைநாதன் சுகந்தகுமார், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அதன் மாவீரர் குடும்பனலன் பேணல் அமைச்சர் திரு. உருத்திராபதி சேகர்,  பிரித்தானிய தமிழ் இளையோர்அமைப்பின் Continue reading “தேசிய நினைவெழுச்சி நாள் 2011 – பேரெழுச்சியுடன்” »
Remembrance Day 2010
MIT_1310 IMG_8027 DSC_5318 IMG_7619 IMG_8017 MIT_1313 DSC_5223 IMG_7872 DSC_0216 DSC_5467 DSC_5316 _KUG4513 IMG_7837 DSC_0062 IMG_7867 IMG_7813 IMG_7647 DSC_5502 IMG_7677 IMG_7839 DSC_0113 _KUG4869 IMG_7798 DSC_5438
27 NOV 2011 @ Murugadas Ninaivu Thidal
Follow TNRF Twitter
மாவீரர் கவிமழை

புதைத்த‌ இட‌த்தினிலே
புழுதி அட‌ங்க‌வில்லை
விதைத்த‌ வித்துட‌லில்
குருதி காய‌வில்லை அத‌ற்குள்
சிதைத்த‌ க‌ல்ல‌றையில்
சிலிர்த்து நிற்குமெங்க‌ள் ஆவி
ஈழ‌ம் மீட்டெடுத்து த‌மிழ்
இன‌த்தின் மான‌ம் காக்க‌வென‌
மார்த‌ட்டி வா த‌மிழா எம்
க‌ல்ல‌றையில் ச‌த்திய‌ம் தா தமிழா..

~~~~~~~~~~~~~~~~~~

மேலும்

உங்களுடைய கவிதைகளும் இங்கு இடம்பெறுவதற்கு எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்: tnrf.co.uk@gmail.com

Remember The Fallen