லண்டனில் நடைபெற்ற சரித்திர நாயகர்கள், மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவு வணக்க நிகழ்வு!

UK_NIKALVU22042012VN200x150news2009 ஆம் ஆண்டு ஆனந்தபுரம் சமர்க்களத்தில் வீரகாவியமாகிய நூற்றுக்கணக்கான மாவீரர்கள் உட்பட இம்மாத காலங்களில் வீரகாவியமாகிய மாவீரர்களையும், மற்றும் தமிழீழ நாட்டுப்பற்றாளர்கள் அனைவரையும் நினைவுகொள்ளூம் நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.

“Alperton Community School” மண்டபத்தில் நேற்று 22.04.2012 ஞாயிற்றுக்கிழமை நடந்த  இந் நிகழ்வில் பொதுச்சுடரினை கவுன்சிலர் திரு.கணா அவர்கள் ஏற்றி வைக்க அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்டர், பிரிகேடியர் சொர்ண்ணம், பிரிகேடியர் பால்ராஜ், ஆகியோரின் திருவுருவப் படங்களுக்களுக்கு பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர் அவர்களின் தாயார் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார். 

அதைத் தொடர்ந்து பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் தமிழேந்தி, பிரிகேடியர் மணிவண்ணன், ஆகியோரின் திருவுருவப் படங்களுக்களுக்கு திரு. சுரேஸ் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார். 

“ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக கல்லறை வணக்க நிகழ்வு!

“ஈகப்பேரொளி” முருகதாசனின் மூன்றாம் ஆண்டு நினைவுனாளான இன்று லண்டனில் அவரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள இடத்தில் “கல்லறை வணக்க நிகழ்வு” நடைபெற்றது.

இன்று 12.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு “ஈகப்பேரொளி” முருகதாசனின் வித்துடல் அமைந்துள்ள வளாகத்தின் வாயிலில் கூடிய மக்கள் மலர்களையும், மெழுகுவர்த்தியையும் கைகளில் ஏந்தி வரிசையாக 200 மீற்றர் தூரம் நடந்து “ஈகப்பேரொளி” முருகதாசனின் விதைகுழி அருகில் ஒன்றுகூடினர்.

முதலில் “ஈகப்பேரொளி” முருகதாசனின் தந்தையார் திரு.வர்ணகுலசிங்கம் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி வைக்க மலர் மாலையினை  தாயார் அணிவித்தார்.

தொடர்ந்து எல்லோருமாக இணைந்து ஒரே குரலில் உறுதியேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. உறுதியேற்பினைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வினை “ஈகப்பேரொளி” முருகதாசனின் உறவினர்கள் ஆரம்பித்துவைக்க தொடர்ந்து மக்கள் தமது மலர்வணக்கத்தினை செலுத்தினர்.
Continue reading ““ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக கல்லறை வணக்க நிகழ்வு!” »

லண்டனில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், சமகால அரசியல் ஆய்வரங்கும்.

“தேசத்தின் குரல்”  கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், சமகால அரசியல் ஆய்வரங்கமும் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நடைபெற்றது.
 
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு வடமேற்கு லண்டன் WATFORD ROAD, NORTHWICK PARK, HARROW, MIDDLESEX, HA1 3TP எனும் முகவரியில் அமைந்துள்ள “WESTMINISTER UNIVERCITY ” கலையரங்கில் நேற்று (18.12.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8:30 மணீவரை நடைபெற்றது.

தேசிய நினைவெழுச்சி நாள் 2011 – பேரெழுச்சியுடன்

பேரெழுச்சியுடன்  பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு. – பிரித்தானியா
Tamil National Remembrance Day 2011
பிரித்தானியாவில் 27.11.2011 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளில் பேரெழுச்சியுடன்  பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.
முருகதாசன் நினைவுத் திடலில் மதியம் 12:30 மணிக்கு ஈகைச்சுடரேற்றலோடு ஆரம்பமான  இத் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வில்  ஈகைப்பேரொளி முருகதாசின் தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தாயக விடுதலைக்காக தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள், மற்றும் அன்நிய சிறீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும், மண்மீதும், மொழிமீதும் பற்றுக்கொண்டு அதற்காகப் பணிசெய்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மாமனிதர்களுக்காகவும், தமிழ்ர்களின் விடுதலைக்காக ஆசிய ஐரோப்பிய நாடுகளில் வேழ்வித் தீ ஆகிய தியாகிகளுக்காகவும், சிறீலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தாய்த் தமிழக உறவுகளுக்க்ஆகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தினை தொடர்ந்து 12:35 மணிக்கு (தாயக நேரம் பிற்பகல் 6:05மணி) பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவரும், தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவியுமான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்த்அரம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து துயிலுமில்ல பாடல் அகன்ற திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்வணக்க்அ நிகழ்வுகளும் எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றது.
தாயகத்தில் மாவீரர்களை விதைத்த துயிலுமில்லங்களைப் போன்று அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவுக் கல்லறைகளில் மக்கள் வரிசையாக வந்து மலர்வணக்கம் செலுத்தினர்.
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான கார்த்திகை மலர்களையும், தீபம் ஏற்றுவதற்கான சிட்டிகளும்  ஏற்பாட்டாளர்கள் விற்பனை செய்யாது மக்களுக்கு வழங்கியதும், அம் மலர்களை மக்கள் கல்லறைகளில் வைத்து வணங்கிய பின் கார்த்திகை மலர்க் குவியலின் நடுவே கல்லறைகள் மிடுக்குடன் காட்சியளித்தமை அனைவரதும் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மைக்கோனால்ட், விரேந்திர சர்மா, யூலியன் பெல், றோபேட் இவான்ஸ், மற்றும் DR. ஒண்கார் சஹோத்தா, ACT NOW தொண்டு நிறுவனத்தின்  இயக்குனர் திரு. ரிம் மார்ட்டின் உட்பட பிரித்தானியத் தமிழ்ர் பேரவையின் Chairman திரு. நல்லைநாதன் சுகந்தகுமார், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அதன் மாவீரர் குடும்பனலன் பேணல் அமைச்சர் திரு. உருத்திராபதி சேகர்,  பிரித்தானிய தமிழ் இளையோர்அமைப்பின் Continue reading “தேசிய நினைவெழுச்சி நாள் 2011 – பேரெழுச்சியுடன்” »

Tamil Poppy blooms from rubbles

At the end of Armistice day , when people have paid their tribute to the fallen soldiers in world war , a small nation continues to pay their respect to the fallen soldiers of their own nation. Nobody else but the small but very well known world wide spread 'Tamils' will begin their week of remembrance with their own poppy called " Kanthal flower " (Gloriosa lily) in addition to the usual poppy flower. Tamils are the second nation who have their own flower to remember their war heroes apart from world war participant country nationalities. Read the rest of this entry »
Remembrance Day 2010
DSC_5565 DSC_5318 MIT_1309 _KUG4869 IMG_7837 DSC_0039 DSC_5223 IMG_7637 IMG_8027 DSC_5561 MIT_1221 DSC_5262 IMG_7838 DSC_5555 IMG_7662 IMG_7900 _KUG4513 IMG_7647 IMG_7867 IMG_7948 DSC_5467 DSC_0204 IMG_7643 DSC_0140
27 NOV 2011 @ Murugadas Ninaivu Thidal
Follow TNRF Twitter
மாவீரர் கவிமழை

புதைத்த‌ இட‌த்தினிலே
புழுதி அட‌ங்க‌வில்லை
விதைத்த‌ வித்துட‌லில்
குருதி காய‌வில்லை அத‌ற்குள்
சிதைத்த‌ க‌ல்ல‌றையில்
சிலிர்த்து நிற்குமெங்க‌ள் ஆவி
ஈழ‌ம் மீட்டெடுத்து த‌மிழ்
இன‌த்தின் மான‌ம் காக்க‌வென‌
மார்த‌ட்டி வா த‌மிழா எம்
க‌ல்ல‌றையில் ச‌த்திய‌ம் தா தமிழா..

~~~~~~~~~~~~~~~~~~

மேலும்

உங்களுடைய கவிதைகளும் இங்கு இடம்பெறுவதற்கு எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்: tnrf.co.uk@gmail.com

Remember The Fallen
Remembrance Day 2011
Click on the link below to view the Remembrance Day 2011 Financial summary.
Click on the link below to view the Remembrance Day 2011 Financial summary. Click
தேசப்புதல்வர்கள் குடும்ப விபரப் படிவம். TNRF
Join TNRF FaceBook Group
User Submitted Images
TNRF

The Tamil National Remembrance Foundation(TNRF) is an organization formed by Mothers, Fathers, Brothers, Sisters and Friends to remember theirs beloved ones who Fallen in the Liberation Struggle of Tamil Eelam We Organize The Tamil National Remembrance Day in the UK. We dedicate this web to our “Maaveerar” Fallen Heros of Tamil Eelam.

Read more